5ம் தேதி வேளச்சேரி-பரங்கிமலைக்கு அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

 
train

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் அதிவேக சோதனை ஓட்டம் 5ம் தேதி பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது

தெற்கு இரயில்வேயின் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட வேளச்சேரி -பரங்கிமலை (கி.மீ. 19.796 முதல் கி.மீ. 24.245 வரை) பறக்கும் இரயில் (MRTS) தடத்தில் புது டெல்லி முதன்மை இரயில்வே பாதுகாப்பு ஆணையர், 05-03-2026 வியாழக்கிழமை அன்று மதியம் 14:00 மணி முதல் மாலை 17:30 மணி வரை சிறப்பு இரயில் மூலம் அதிவேக சோதனை ஓட்டத்தை நிகழ்த்த உள்ளார். ஆகையால் இந்நிகழ்வின்போது, அனுமதி இல்லாத நபர்கள் யாரும் இரயில் தண்டவாளங்களை நெருங்கவோ அதன் அருகில் வேலை செய்யவோ வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.