“பில்லிங்கில் ஏற்பட்ட குறைபாடால் அதிகப்படியான மின் கட்டணம்”- மின்வாரியம் விளக்கம்
மீட்டர் கணக்கீடு, பில்லிங் செயல்முறைகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளால் சில இடங்களில் கூடுதல் மின் கட்டணம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மின்வாரிய தலைமைப் பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு தவறான மற்றும் அதிகபடியான மின் கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக நெல்லை மின்வாரிய தலைமை பொறியாளர் கூறியுள்ளார். இதற்கு காரணம் மின்வாரிய அதிகாரிகளால் அடிப்படைக் கள ஆய்வு முறையாக மேற்கொள்ளப்படவில்லை விளக்கம் அளித்துள்ள அவர், மீட்டர் கணக்கீடு, பில்லிங் செயல்முறைகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளால் சில இடங்களில் கூடுதல் மின் கட்டணம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் மின்விநியோக வட்டங்களில் முறையாக ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்றும் பழுதடைந்த மீட்டரின் மின் அளவுகளில் இருக்கும் பிரச்சனை தொடக்க நிலையிலேயே கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வு அதிகாரிகள் தங்களது கடமையை முறையாக செய்திருந்தால் பிரச்சனையை தவிர்த்து இருக்கலாம் என்றும் மின்வாரிய தலைமைப் பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார். காலமுறைப்படி திடீர் ஆய்வு மேற்கொள்ள மேற்பார்வை பொறியாளர்களுக்கு நெல்லை மண்டல தலைமை பொறியாளர் அறிவுறுத்தியுள்ளார்.

