டாஸ்மாக் கடைகளில் போலீஸ் பாதுகாப்பு போட அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
அதிக கூட்டம் உள்ள டாஸ்மாக் கடைகளில் போலீஸ் பாதுகாப்பு போட அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட கோரி தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விற்கப்படும் மதுபானங்களுக்கு ரசீது வழங்க வேண்டும் என மதுபான கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் கூறியது. இதனை கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மாநிலத்துக்கு பெரும் வருவாயை தரும் மதுபான கடைகளில் ரசீது வழங்குவதில் என்ன சிக்கல் உள்ளது? நுகர்வோர் கூட்டம் அதிகமாக உள்ள கடைகளில் காவலர்களை பணியமர்த்த, உள்துறைக்கு உத்தரவிட்டார். மனுதாரர் புகாரை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேபோல் அதிக கூட்டம் உள்ள டாஸ்மாக் கடைகளில் போலீஸ் பாதுகாப்பு போட அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாட்டிலுக்கு கூடுதல் தொகை வசூலித்தால் போலீசில் புகாரளித்து உடனே வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. பெரும் வருவாயை தரக்கூடிய மதுக்கடைகளில் ரசீது வழங்குவதில் சிக்கல்? எனவும் அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

