ஆதவ், நிர்மல் குமார் மீது அவதூறு வழக்கு தொடர திமுகவுக்கு ஐகோர்ட் அனுமதி

 
ஆதவ், நிர்மல் குமார் மீது அவதூறு வழக்கு தொடர திமுகவுக்கு ஐகோர்ட் அனுமதி

அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா, தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு எதிராக வழக்கு தொடர திமுகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

போக்சோ குற்றவாளி ஜெம் வீரமணி வழக்கில் தங்களை இணைத்து பேசிய அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு எதிராக ரூ.1.1 கோடி மானநஷ்டஈடு கோரி வழக்கு தொடர திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பாலியல் வழக்கில் வீரமணியை திமுக அரசு தப்பிக்கவிட்டதாக அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா கூறியிருந்தனர். வீரமணி வழக்கில் முந்தைய திமுக அரசுக்கு எதிராக தவெக தொழில்நுட்ப பிரிவும் குற்றம்சாட்டி பதிவிட்டிருந்தது.


இந்நிலையில் ஜெம் வீரமணி வழக்கை மூடி மறைத்ததாக குற்றஞ்சாட்டிய அமைச்சர்களுக்கு எதிராக ரூ.1.1 கோடி மானநஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர திமுக பொதுச்செயலர் துரைமுருகனுக்கு அனுமதி தந்தது உயர் நீதிமன்றம்.