குமரியில் புரோட்டா சாப்பிடும் போது விக்கல்- கொத்தனார் பலி
May 31, 2024, 16:54 IST1717154688217

கன்னியாகுமரியில் புரோட்டா சாப்பிடும் போது விக்கல் ஏற்பட்டதில் கொத்தனார் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு ஹோட்டல் ஒன்றில் இருந்து புரோட்டா வாங்கிட்டுவந்த கொத்தனார் சனந்தனகுக்கு, அதனை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது விக்கல் எடுத்துள்ளது. உடனே சாப்பிட முடியாமல திணறிய அவர், தனது தாயிடம் தண்ணீர் கேட்டுள்ளார். தன் தாயிடம் தண்ணீர் வாங்கி குடித்தபோது மயங்கிவிழுந்துள்ளார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர் சனந்தனனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.