ஹே பொண்டாட்டி நீ எவ்ளோ அழகு தெரியுமா?.. மிஸ் யூ...மாதம்பட்டி வீடியோ வைரல்..!!
Nov 6, 2025, 10:41 IST1762405864225
மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா அண்மையில், தன்னை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து, கர்பமாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்து அனைத்தையும் வெளிப்படையாக பேசியிருந்தார்.
இதனால், நெட்டிசன்கள் ரங்கராஜை இணையத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முதல் மனைவி இருக்கும் போதே மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்தது இவர் முதல் மனைவி உட்பட குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியும் என குறிப்பிடும் ஜாய் தன் குழந்தைக்கு நியாயம் வேண்டும் என நியாயம் கேட்டு போராடிக்கொண்டிருக்கிறார் .
இந்த நிலையில் ஜாய் என்னை மிரட்டியதால் திருமணம் செய்து கொண்டேன்" என்றும் மகளிர் ஆணைய விசாரணையில் நடந்தவற்றைப் பற்றியும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ், "மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை.
நான் ஜாய்யை தன்னிச்சையாக (under free will) திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை நான் திட்டவட்டமாக கூறுகிறேன். ஜாய் என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக பலமுறை மிரட்டியதால், இந்த திருமணம் மிரட்டலின் பேரில் நடந்தது.
செப்டம்பர் 2025 இல், ஆயிரம் விளக்குகள், மகளிர் காவல் நிலையத்தின் புலனாய்வு அதிகாரி முன்பும், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்திலும் விரிவான வாக்குமூலங்களை நான் ஏற்கனவே அளித்துள்ளேன், இந்தத் திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.
கமிஷனின் முன் நடந்த அடுத்தடுத்த நடவடிக்கைகளின் போது, ஜாய் எனக்கு மாதத்திற்கு ரூ. 1,50,000/- பராமரிப்புத் தொகையாகவும், தனது BMW காருக்கு ரூ. 1.25 லட்சம் மாதாந்திர EMI-யையும் செலுத்த வேண்டும் என்றும் கோரினார், நான் அந்த கோரிக்கையை மறுத்துவிட்டேன்.
நான் ஒருபோதும் டிஎன்ஏ பரிசோதனையை மறுத்ததில்லை, மேலும் அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால்(DNA Test), அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளேன். இந்த வாக்குமூலம் ஏற்கனவே ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய விசாரணை அதிகாரி முன் செப்டம்பர் 2025 அன்றே பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மகளிர் ஆணையத்தின் பரிந்துரை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த வாக்குமூலத்தையும் அளிக்கவில்லை. அந்த பரிந்துரை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன், மேலும் உண்மையை நிறுவ அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்பேன். ஆணையத்தின் முன் நடந்த அனைத்தும் சட்டத்தின்படி நீதிமன்றத்தில் முறையாக சமர்ப்பிக்கப்படும்" என்று மாதம்பட்டி ரங்கராஜ் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் தான் அவரை மிரட்டி திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கூறியிருந்த ஜாய் கிரிஸில்டா தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், "ஹே பொண்டாட்டி நீ எவ்ளோ அழகு தெரியுமா?.. அவ்வளவு அழகு. லவ் யூ. சீக்கிரம் வந்துடு மிஸ் பண்றேன். மிஸ் யூ. ரெடி ஆகிவிட்டேன்" என்று சொல்லி மாதம்பட்டி ரங்கராஜ் முத்தமும் கொடுத்திருக்கிறார். மேலும் அந்த வீடியோவுடன், “இந்த வீடியோ என்ன மிரட்டலின் பெயரில் அனுப்பியதா??! மாதம்பட்டி ரங்கராஜ்
இந்த வீடியோ என்ன மிரட்டலின் பெயரில் அனுப்பியதா??! Mr husband @MadhampattyRR ?
— Joy Crizildaa (@joy_stylist) November 6, 2025
மக்களே, ப்ளீஸ் சொல்லுங்க — இதுல லவ் லா பேசுறாரா இல்ல மிரட்டலின் பெயரில் பேசுறாரா?
கேக்குறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்ற மாதிரி 😂😂
This message was sent to me by my so-called… pic.twitter.com/AH8yekYNBs
இந்த வீடியோ என்ன மிரட்டலின் பெயரில் அனுப்பியதா??! Mr husband @MadhampattyRR ?
— Joy Crizildaa (@joy_stylist) November 6, 2025
மக்களே, ப்ளீஸ் சொல்லுங்க — இதுல லவ் லா பேசுறாரா இல்ல மிரட்டலின் பெயரில் பேசுறாரா?
கேக்குறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்ற மாதிரி 😂😂
This message was sent to me by my so-called… pic.twitter.com/AH8yekYNBs


