மின்சார வாரியத்தில் 300 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதில் உண்மை இதுதான் - திமுக அளித்த விளக்கம்
மின்சார வாரியத்தில் 300 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதில் உண்மை இதுதான் என திமுக அளித்த விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TNEB) 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு (AEE) பதவி உயர்வு வழங்கப்பட்டதை, தவெக அரசு "வரலாற்றில் முதன்முறை" என விளம்பரப்படுத்தியது.இதுகுறித்து திமுக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், 2000-2001 ஆம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த உதவி பொறியாளர்களின் 'Seniority' விவகாரம், பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இருந்தது. மார்ச் 11, 2026 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, இந்த முட்டுக்கட்டையை உடைத்தது. தீர்ப்பு வந்த மறுநாளே, மார்ச் 12, 2026 அன்று, அப்போதைய திமுக அரசு 416 உதவி செயற்பொறியாளர்களை (AEE) செயற்பொறியாளர் (EE) பதவி உயர்விற்குப் பரிசீலிக்கப் பட்டியல் தயார் செய்யப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகளால் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த செயல்முறையை, தற்போது தவெக அரசு தொடர்ந்துள்ளது. அதன்படி, தகுதி வாய்ந்த 416 பேரில், ஏன் 300 பேருக்கு மட்டும் தற்போது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 2026-ல் திமுக அரசு 416 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது. தற்போது ஜூன் 6, 2026-ல் 300 பேருக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 116 பொறியாளர்களின் நிலை குறித்த தெளிவான விளக்கம் அரசுத் தரப்பில் இல்லை என்பது குறிப்பிடதக்கது.

