தாயகம் திரும்பும் இந்தியர்களுக்கு மாற்று வழி : இந்தியர்களுக்கு உதவி எண் அறிவிப்பு..!!
Oct 14, 2026, 11:38 IST1791958128335
அரேபியாவில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால், இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
சவுதி அரேபியாவில் இருந்து தாயகம் திரும்ப நினைக்கும் இந்தியர்கள் கத்தார், பஹ்ரைன் போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள விமானங்களின் மூலமாக நாடு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியர்களின் வசதிக்காக, 24 மணி நேரத் தூதரகக் கட்டுப்பாட்டு அறையை +966-1 1-488469 / WhatsApp: +966-536216082 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஜெட்டா மற்றும் மதீனாவுக்கு பயணம் செய்யும் இந்திய உம்ரா யாத்ரீகர்களுக்கும் ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத்தூதரகம் இதே மாதிரியான அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

