நான் மற்றவர்களுக்கு உதவுவது ஒரு மாற்றத்துக்கான செல்ப் சர்வீஸ் மட்டுமே - நடிகர் ராகவா லாரன்ஸ்..!

 
1

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் வர்ஷிணி. இவர் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 592 மதிப்பெண்கள் எடுத்தார். ஏழ்மை குடும்த்தை சேர்ந்தவர் வர்ஷிணி. இவர் கல்லூரியில் படிக்க நடிகர் ராகவா லாரன்ஸ் சீட் வாங்கி கொடுத்தார்.அதோடு அவரின் படிப்புக்கான கல்வி உதவித்தொகையாக ரூ.50 ஆயிரத்தை ராகவா லாரன்ஸ் நேரடியாக அவரது வீட்டுக்கு சென்று வழங்கினார்.

இந்நிலையில் தான் வர்ஷிணிக்கு உதவித்தொகை வழங்கிய பிறகு ராகவா லாரன்ஸ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: என்னை பார்த்து பல்வேறு பட்ட மக்கள் உதவி செய்வார்கள் என்பதற்காக தான் நான் வீடு தேடி சென்று உதவிகளை செய்து வருகிறேன் அதில் எனக்கு ஒரு சந்தோஷம் உள்ளது. கிராமங்களுக்கு சென்றால் என்னிடம் ஏகப்பட்ட மனுக்கள் தருகின்றனர். அதை படிக்க படிக்க அவ்வளவு கஷ்டங்கள் உள்ளது. என்னால் முடிந்த அளவில் எவ்வளவு உதவி செய்ய முடியுமோ அந்த அளவிற்கு நான் உதவி செய்வேன். யாரிடமும் பணம் வாங்காமல் எனது சொந்த செலவில் செய்து வருகிறேன்'' என்றார்.

‛‛நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா'' என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு ராகவா லாரன்ஸ், ‛‛எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் நோக்கம் எனக்கு இல்லை. இது ஒரு மாற்றத்துக்கான செல்ப் சர்வீஸ். இந்த சேவையானது கடவுளுக்கான சேவை. இது அரசியலுக்கான நோக்கம் அல்ல. அரசியல் என நினைப்பவர்கள் போகப்போக புரிந்து கொள்வார்கள்'' என்றார்.