"காப்பாத்துங்க..." ஏரியிலிருந்து கேட்ட அலறல் சத்தம்! புதைசேற்றில் சிக்கி தவித்த இளைஞரை மீட்ட மா.சுப்பிரமணியன்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அந்த தொகுதியில் முகாமிட்டு திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான வழக்கறிஞர் பரந்தாமனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்.
இன்று காலை, மதுராந்தகம் தொகுதியில் உள்ள வேடந்தாங்கல் ஏரியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது ஏரியின் ஒரு பகுதியில் இருந்து குரல் கேட்டு அங்கு சென்று பார்த்தபோது, புதை சேற்றில் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவித்த ஒரு இளைஞரை பார்த்தார். இரவு முழுவதும் தவித்த அந்த இளைஞர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
பின்னர், உள்ளூர் மக்கள் உதவியுடன் இந்த இளைஞரை மீட்கும் நடவடிக்கையில் மா.சுப்பிரமணியன் ஈடுபட்டார். நீண்டநேரம் சேற்றில் சிக்கியிருந்த இளைஞரை பத்திரமாக மீட்டு முதலுதவி அளித்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞரின் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார். அந்த இளைஞரின் குடும்பத்தினர், மா.சுப்பிரமணியனுக்கு நன்றி தெரிவித்தனர்.
இரவு முழுவதும் வேடந்தாங்கல் ஏரியின் புதை சேற்றில் சிக்கித் தவித்த இளைஞரை, அந்த வழியாக நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை வேடந்தாங்கல் நடைபயிற்சியின் போது, இரவு முழுவதும் புதைசேற்றில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒருவரை பத்திரமாக மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து உயிர் காப்பாற்றப்பட்டது.#Masubramanian #Vedanthangal #Humanity #LifeSaving… pic.twitter.com/veNO5x9wgf
— Ma Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@Subramanian_ma) September 22, 2026