2 ஆண்டுகளாக நரக வேதனை... ‘அந்நியன்’ போல நடந்துகொண்டார்..! முன்னாள் காதலர் குறித்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் பரபரப்பு குற்றச்சாட்டு!

 
1

பிரேமம் திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகில் பிரபலமான அனுபமா பரமேஸ்வரன், அதன் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார். தென்னிந்திய திரை உலகின் புகழ்பெற்ற நடிகையான அவர், பொதுவெளியில் தனது காதல் பற்றி கூறிய அனுபமா , " கடந்த இரண்டு வருட காலங்களாக தான் அனுபவித்துள்ள மனரீதியான மற்றும் உடல் ரீதியான துன்பங்களை பற்றி கூறியுள்ளார். இந்த காலகட்டத்தில் தான் தற்பெருமை சார்ந்த துன்புறுத்தலுக்கு ஆளானதாக" கூறியுள்ளார்.

இதற்கு பதிலாக நான் ஒரு மஞ்சள் நிற புடவை அணிந்து, ஒரு புகைப்படத்தை பதிவிட்டு 'அனுபமா, அமைதியாக இளைப்பாறுங்கள், அவர் தற்கொலை செய்துகொண்டார்' என்று பதிவு செய்து இருந்தால், இன்று எனக்கு ஏராளமான அன்பு கிடைத்திருக்கும். இது குறித்து நிறைய விவாதங்கள் பொது வெளியிலும் நடந்து இருக்கும்.

என் காதல் உறவு முறிந்தது பற்றி வெளி உலகத்திற்கு வெளிச்சத்திற்கு வந்து ஒரு மாதத்திற்கும் மேல் கடந்து விட்டது. என் குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்கள் உள்பட அனைவருக்கும் என் காதல் சரியானது அல்ல என்பதை புரிந்து வைத்திருந்தனர். என்னிடம் ஏற்பட்ட மாற்றங்களை என்னை சுற்றி உள்ளவர்கள் கூர்ந்து கவனித்து வந்தனர்.

இரண்டு ஆண்டுகளாக நான் அனுபவித்த வேதனைகள் ‘நார்சிசிஸ்டிக் அப்யூஸ்’ என்ற உளவியல் துன்புறுத்தல் ஆகும். அந்த உறவு தொடங்கிய கால கட்டத்தில் நான் என்னையே முழுவதும் இழக்க தொடங்கி இருந்தேன் . உடல் ரீதியாகவும் மனரீதியாக என்னை அவர் துன்புறுத்தியிருந்தார்.என் உடல் எடை குறைந்து கொண்டே வந்தது .மலர வேண்டிய நான் மெல்ல சுருங்க தொடங்கினேன்.

தங்களின் காதல் வளரத் தொடங்கிய பின்னர், அவர் தன்னை அவரது குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்ததாக கூறினார். மூன்று மாதங்களுக்குள் நிச்சயதார்த்த பேச்சு வார்த்தைகள் கூட நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் எத்தனை பேர் கலந்து கொள்ள வேண்டும்? எந்த இடத்தில் நடத்தப்பட வேண்டும்? என்ன உணவுகள் பரிமாறப்பட வேண்டும் என்றும் விவாதித்தனர்.

இந்த அவசரகால நிச்சயதார்த்தத்தை நான் நிராகரித்து விட்டேன் , அதனால் என்னை 'பணத்தாசை பிடித்தவள்' என்று கூறினார்கள். ஆனால், நான் இந்த நிச்சயதார்த்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தால், விரைவில் ஒரு நாள் அது விவாகரத்தில் முடிந்திருக்கும்.

அவர்கள் கேட்டபோது, ​​நான் இன்னும் சிறிது அவகாசம் கேட்டேன்,என்று அனுபமா பரமேஸ்வரன் கூறினார்.

மேலும் தனது முன்னாள் காதலர் 'அந்நியன்' படத்தில் வரும் அம்பி போலவும் ரெமோ போலவும் அந்நியன் போலவும் நடந்துக் கொண்டார். "ஒருநாள் அவன் மிகவும் கொடூரமாக நடந்துகொள்வான். அதற்கு அடுத்த நாள் மன்னிப்புக் கேட்டு ,இனி ஒருபோதும் அப்படிச் செய்ய மாட்டேன் என்று கெஞ்சுவான் , ஒரு குழந்தையைப் போல அழுவான். இது தினசரி நடந்துக் கொண்டே இருந்தது" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

அனுபமாவின் இந்த நேர்காணல் தற்போது கவனம் பெற்று வருகிறது. பலரும் யார் அந்த நடிகர்? என்றும் , ஒரு சிலர் ஒரு நடிகரின் பெயரை குறிப்பிட்டு சாடியும் வருகின்றனர்.