குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு சின்னம் அமைப்பு!

 
Conoor

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த 2021ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்ததன் நினைவாக நினைவுச்சின்னம் அமைப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 2021ம் ஆண்டு ஏற்பட்ட ஹெலிகாப்ட விபத்தில் இந்திய ரானுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் அந்த விபத்தில் அவருடன் சென்ற 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹெலிகாப்ட விபத்து நடந்த பகுதியில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் நினைவாக நினைவிடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. 

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த 2021ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்ததன் நினைவாக, நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ள்ளது.  ஹெலிகாப்டர் விழுந்த அதே இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சின்னம், நினைவு தினமான டிசம்பர் 8ம் தேதி திறக்கப்பட உள்ளது. ஹெலிகாப்டன் விபத்தில் உயிரிழந்த 14 பேரின் பெயர்களும் இதில் பொறிக்கப்பட்டுள்ளது.