செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்

 
டோல்கேட்

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னை நோக்கி வர துவங்கி உள்ளனர். 

தீபாவளி பண்டிகை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் பல்வேறு வட மாவட்டங்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் தீபாவளி பண்டிகை கொண்ட படையெடுத்தனர். இதனால் சென்னை புறநகர் பகுதியான தாம் பரனூர் சுங்கச்சாவடி ஆகிய பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

இந்த நிலையில் தற்போது நாளை வேலை நாள் என்பதால் மாலை முதலே தென் மாவட்டத்திலிருந்து சென்னை நோக்கி பொதுமக்கள் படையெடுக்க துவங்கியுள்ளனர். தற்பொழுது செங்கல்பட்டு அடுத்துள்ள பரனுர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க துவங்கி உள்ளது. ஏராளமான கார்கள் மற்றும் வாகனங்களில் பொதுமக்கள் சென்னையை நோக்கி படையெடுத்த துவங்கி உள்ளனர்.

திருச்சி - சென்னை ஜி.எஸ்.டி சாலை மார்கமாக வழக்கமாக ஆறு பூத்களில் வாகனங்களை அனுப்பி வைப்பது வழக்கம். ஆனால் தீபாவளி பண்டிகையை முடிந்து மக்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் என்பதால் கூடுதலாக இரண்டு பூத்கள் திறக்கப்பட்டு எட்டு பூத்களில் வாகனங்களை அனுப்பி வைத்து வருகின்றனர்.