சென்னை திரும்பும் மக்கள்... சிங்கபெருமாள்கோவிலில் கடும் போக்குவரத்து நெரிசல்

 
ச்

சிங்கபெருமாள்கோவில் பகுதியில் திருச்சி - தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 23 ஆம் தேதி 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தங்களின் ஜனநாயக கடமையாற்ற சென்னையில் உள்ள மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று ஜனநாயக கடமையாற்றியதை தொடர்ந்து மீண்டும் சென்னை நோக்கி வருகின்றனர். இதனால் செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம், ஆட்டோ, வேன், கார், அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் என பல ஆயிரகணக்கான வாகனங்கள் தென் மாவட்டத்தில் இருந்து ஒரே நேரத்தில் சென்னை நோக்கி படையெடுத்துள்ளதால் இந்த போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டுள்ளது.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிங்கபெருமாள்கோவில் ஏற்பட்டுள்ள கடும் போக்குவரத்து நெரிசலால் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஜி.எஸ்.டி சாலை ஸ்தம்பித்துள்ளது இந்த போக்குவரத்து நெரிசலை தாம்பரம் மாநகர போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசாரும் நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.