#BREAKING எல் நினோ தாக்கத்தால் இந்த ஆண்டு கனமழை பெய்யும்- தமிழக அரசுக்கு நிபுணர் குழு எச்சரிக்கை
தமிழகத்துக்கு கனமழை, வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
2026 வடகிழக்கு பருவமழையில் சில பகுதிகளில் கனமழை பெய்து நகர்ப்புற, ஆற்றுப்புற மற்றும் கடலோர வெள்ளம் ஏற்படலாம். சில பகுதிகளில் மழைப்பற்றாக்குறை ஏற்பட்டு குடிநீர் மற்றும் பாசனத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்புள்ளது. 2027 கோடையில் கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை ஏற்படலாம் என்பதால் அரசு முன்கூட்டியே தயாராக வேண்டும்.
வடகிழக்கு பருவமழைக்கு முன் ஆறுகள், கால்வாய்கள், நீர்த்தேக்கங்கள், அணைகள் மற்றும் வடிகால்களை ஆய்வு செய்து, வண்டல் மண் மற்றும் குப்பைகளை அகற்ற வேண்டும். வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் எச்சரிக்கைகளை மாவட்டம் மற்றும் வட்டாரத்தின் ஆபத்துக்கு ஏற்ப தமிழில் விரைவாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். 2027 கோடையை எதிர்கொள்ள வெப்பம், வறட்சியைத் தாங்கும் குறுகிய கால பயிர்களை ஊக்குவிக்கவும், பள்ளிகள் மற்றும் அரசு கட்டிடங்களில் வெப்பத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

