சென்னையில் நாளை மழை வெளுத்து வாங்கும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 
சென்னை மழை

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடித்து வருகிறது. தற்போதுள்ள சூழலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தள்ளது. இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் மாலை 4மணி முதல் மக்களை குளிர்வித்து வரும் குளுகுளு மழை… –  www.patrikai.com

27 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தற்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் கணிக்கப்பட்டுள்ளது.