கோடியக்கரையில் கொட்டியது கனமழை..! 24 மணி நேரத்தில் 250 மி.மீ மழைப்பதிவு..!

 
1 1

டிட்வா புயலால் தற்போது இலங்கை முழுவதும் அதி கனமழை பெய்து வரும் நிலையில், புயல் தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதால் இங்கும் மழை அளவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இந்த புயல் காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இவை தவிர, 14 மாவட்டங்ளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிபேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, அரியலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக, தூத்துக்குடியில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே போல் சென்னையிலும் 54 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

மேலும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது என்றும், டெல்டா உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் தயார் நிலையில் உள்ளர் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில், இன்று காலை 8.30 மணி வரை பதிவான மழைப்பொழிவு மில்லி மீட்டரில்
 

கோடியக்கரை- 250
 

வேதாரண்யம் -185
 

வேளாங்கண்ணி- 133
 

திருப்பூண்டி- 123
 

நாகப்பட்டினம்- 116
 

தலைஞாயிறு- 108
 

பாம்பன்- 74
 

ராமேஸ்வரம்- 74
 

தங்கச்சிமடம்- 74
 

மண்டபம்- 70
 

இளையான்குடி- 68
 

திருக்குவளை- 66
 

தீர்த்தாண்டத்தானம்- 63
 

சூரங்குடி- 63
 

வட்டானம்- 54
 

கடலாடி- 54
 

திருவாடானை- 53
 

வாலிநோக்கம்- 52
 

தொண்டி- 52
 

மீமிசல்- 52
 

சிவகாசி- 52
 

ராமநாதபுரம்- 49

ரெட் அலெர்ட்

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
 

ஆரஞ்ச் அலெர்ட்

புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலுார், பெரம்பலுார், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள், காரைக்காலில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
 

மஞ்சள் அலெர்ட்

வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் இன்று கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ளது.