கனமழை எதிரொலி: நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை...

 
rain school leave rain school leave

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உதகை, குந்தா,  உள்ளிட்ட 4 தாலுக்காக்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.  அத்துடன் கடந்த 3 தினங்களாக நீலகிரியில் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி நீலகிரிக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர், அங்கு மழை பாதிப்புகளை கண்காணித்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால், அம்மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.  

மழை

இந்நிலையில், மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று  ( ஜூன் 16)  தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,  ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. 

குறிப்பாக  நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

 நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழைக்கான எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  உதகை, குந்தா, பந்தலூர், கூடலூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.