தொடரும் கனமழை: நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..

 
தொடரும் கனமழை: நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. 


நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் ஒருசில இடங்களில் அதிகளவு மழை பொழிவு ஏற்படுவதால் நீரோடைகள் நிரம்பி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. சாலைகளில் ஆங்காங்கே மின்கம்பம் சாய்ந்துள்ளது,  மண்சரிவு , மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நீலகிரியில் மழை நீடித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.   

வடகிழக்கு பருவமழை தீவிரம்- சென்னையில் பரவலாக மழை

இந்த நிலையில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய நீலகிரியில் கனமழை பெய்ததால்  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால் மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.  ஏற்கனவே மழை காரணமாக கடந்த வாரத்தில்  உதகை, குந்தா, கூடலூர் பந்தலூர் மற்றும் குன்னூர் ஆகிய தாலுக்கா பள்ளிகளிக்கு மட்டும்  விடுமுறை விடப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று கனமழை காரணமாக  நீலகிரி மாவட்டம் முழுவதுமே பள்ளிகளுக்கு  விடுமுறை விடப்பட்டுள்ளது.