கனமழையால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

 
ச்

தொடர்மழை காரணமாக சென்னை அடுத்த பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

டிட்வா புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மைய்யமாக சென்னை அருகே வங்க கடலில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியான தாம்பரம் குரோம்பேட்டை பல்லாவரம் மீனம்பாக்கம் ஆலந்தூர் பெருங்களத்தூர் முடிச்சூர் வண்டலூர் சேலையூர் செம்பாக்கம் பம்மல் அனகாபுத்தூர் உள்ளிட்ட  பகுதிகளில்
விட்டு விட்டு  கனமழையும், அதுபோல் தொடர்ச்சியாக மழை பெய்துவருகிறது. இதனால் பெருங்களத்துரில் சென்னை மார்கமாக செல்லும் வாகங்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளது. 


பெருங்களத்தூர் மேம்பாலத்தில் இருந்து இறங்கும் வாகனங்களுக்கும், ஜி.எஸ்.டி சாலையில் செல்லும் வாகனங்களையும் போக்குவரத்து போலீசார் நெரிசலை தவிர்க்க  மாற்றி மாற்றி விடுகிறார்கள். ஆனாலும் அதிக கார், வேன், கம்பனி பேரூந்துகள், இருசக்கர்  வாகனங்கள் என சென்னையை நோக்கி வருவதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது.