வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. இன்று 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..!
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கேரளா மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளிலும், தமிழகத்தின் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், இன்று (ஜூன் 6) கோவையில் உள்ள மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.தென்காசி, நெல்லை, மலைப்பகுதிகள், குமரி,ஈரோடு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
ஜூன் 7; கோவையில் உள்ள மலைப்பகுதிகள், நீலகிரி,திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.தென்காசி, நெல்லை, மலைப்பகுதிகள், ஈரோடு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
ஜூன் 8; கோவையில் உள்ள மலைப்பகுதிகள், நீலகிரி,திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் குமரி, தென்காசி, நெல்லை, மலைப்பகுதிகளில் கனமழைக்கு பெய்யும்.
ஜூன் 9 மற்றும் 10ல் ; கோவை தென்காசி, நெல்லை உள்ள மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் குமரி, மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
ஜூன் 11ல்; நீலகிரி, நெல்லை மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும.

