கடலூரில் திடீர் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை

கடலூரில் திடீர் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்ளாக பகல் நேரத்தில் கடும் வெயிலும் மாலை நேரத்தில் குளிர்ந்த காற்றும் வீசி வருகின்றது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில் கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான மஞ்சகுப்பம், திருப்பாபுலியூர், செம்மண்டலம் வண்ணாரபாளையம், வண்டிபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்க்கு மேலாக திடீர் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இந்த திடீர் கனமழை காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். இதனால் பகலில் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் திடீர் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.