கோடையை குளிர்வித்த மழை! எங்கு தெரியுமா?

 
s

கடுமையான வெயில் நிலவிய நிலையில், அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய திடீர் கனமழை பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயிலின் தாக்கம் நிலவி வருகிறது. குறிப்பாக இன்று காலையில் இருந்தே கடுமையான வெயில் வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் மாலையில் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, கோவில்குளம் பள்ளக்கால் புதுக்குடி என அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 10 நிமிடம் என்றாலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மேலும் சில பகுதிகளில் லேசான மழையும் பெய்தது. இதன் காரணமாக அம்பாசமுத்திரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.