சென்னையில் வெளுத்தெடுத்த கனமழை- விமான சேவை பாதிப்பு

 
விமானம்

திடீர் மழை எதிரொலியால் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் விமானங்கள் வானில் வட்டமடிக்கும் வானில் வட்டமடித்தன.

சென்னையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் விமானம் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டது. கோவையில் இருந்து வந்த இண்டிகோ விமானம் பலத்த காற்றால் தரையிறங்காமல் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டது. 2 விமானங்கள் தரையிறங்க இயலாத் சூழலில் விமானப் புறப்பாடும் 20 நிமிடங்கள் வரை தாமதமாகின. மழை, சூறைக்காற்று, இடி, மின்னலின் வேகம் குறைந்த பின், விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட நேரமாக வானில் வட்டமடித்த அபுதாபி விமானம் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது

சென்னையில் பெய்த திடீர் கனமழையால் அண்ணாசாலை, சைதாப்பேட்டை, அண்ணாநகர், கிண்டி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.