சென்னையில் கொட்டித்தீர்த்த மழை

 
Rain

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கனமழை  கொட்டித் தீர்த்தது.

வளிமண்டலத்தில்  ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை,திருவள்ளூர் மாவட்டத்தில் கன மழை பெய்தது. குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதிகளான பூவிருந்தவல்லி, மதுரவாயல், போருர்,ராமபுரம், மாங்காடு,குன்றத்தூர், செம்பரம்பாக்கம், திருவேற்காடு என அனைத்து பகுதியிலும் கன மழை வெளுத்து வாங்கியது.குறிப்பாக செம்பரம்பாக்கத்தில்  அதிகப்படியாக 2 மணி நேரத்தில் 8 செ.மீ மழை பதிவானது.தொடர்ந்து பகல் இருள் சூழ்ந்து குளிர்ச்சியாக இருந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
 
இதனிடையே மதுரை, அரியலூர், கடலூர், நாகை, சேலம், புதுக்கோட்டை, விருதுநகர், தஞ்சை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,சென்னையில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.