திருப்பதியில் 2 நாட்களில் 1.62 லட்சம் பக்தர்கள் தரிசனம்- ரூ.6.89 கோடி உண்டியல் காணிக்கை

 
tirupati undiyal

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் 1.62 லட்சம் பக்தர்கள் இரண்டு நாட்களில் சாமி தரிசனம் செய்து உண்டியலில் ரூ 6.89 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர். 


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே 1, சனி, ஞாயிறு தொடர் விடுமுறை  காரணமாக பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்படுகிறது. வெள்ளி, சனி இரண்டு நாட்களில் 1.62 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் ரூ 6.89 கோடி காணிக்கையாக செலுத்தினர். தொடர்ந்து கோடை விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து இருக்கும் என்பதால் ஏற்கனவே தேவஸ்தானம் சார்பில் ஜுலை வரை வி.ஐ.பி. தரிசனம் செய்யப்பட்டுள்ளதால் கூடுதலாக இலவச தரிசனத்தில் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் பக்தர்கள் வரை சாமி செய்து வைக்கப்படுகிறது. இதனால் இலவச தரிசனத்திற்கு சுமார் 18 மணி நேரமும் ரூ 300 ஆன்லைனில் டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு 7 மணி நேரமும் இலவச சர்வ தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 8 மணி நேரத்திற்கு பிறகு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் இருப்பதால் பக்தர்கள் தங்களுக்கான சாமி தரிசனத்திற்கான நேரம் வரும் வரை பொறுமையுடன் காத்திருந்து தேவஸ்தான அதிகாரிகள் ஊழியர்களுடன் ஒத்துழைப்பு வழங்கி சாமி தரிசனம் செய்ய வேண்டும் என அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.