சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் குறையும் - பிரதீப் ஜான் தகவல்!

 
pradeep

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ஜூன் முதல் தேதியில் இருந்து தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு முன்பாகவே பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.  கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கையானது பாதிக்கப்பட்டுள்ளது.

rain

திருவனந்தபுரம் இடுக்கி மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொல்லம்,  பத்தனம் திட்டா , ஆலப்புழா , கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . 

rain

இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம் , திருவள்ளூர்,  செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வருகிற 2ம் தேதி முதல் வெப்பம் குறையும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.  வட தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.