தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்!!

 
tn

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

rain

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் 3 நாட்கள் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  கடந்த சில வாரங்களாக மாநிலத்தில் வெயில் கொளுத்தி வரும் நிலையில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என தகவல் தெரிவித்துள்ளது.

summer

இன்று முதல் 03.05.2024 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைந்துள்ளது.இன்று  முதல் 01.05.2024 வரை: அடுத்த 3 தினங்களுக்கு, வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°-4* செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 02.05.2024 & 03.05.2024: அதற்கடுத்த 2 தினங்களுக்கு ஏனைய தமிழக வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 3°-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

02.05.2024 & 03.05.2024: இரண்டு தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.