18 மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும்

 
summer

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெப்ப அலை  வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

tn

தமிழ்நாட்டில் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது.  அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நாளை தொடங்கி மே 28-ந் தேதி வரை தொடர்ந்து 25 நாட்களுக்கு அக்னி வெயில் நீடிக்கும். 

tn

தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூரில் அனேக இடங்களில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசுவதால் வெயில் சுட்டெரிக்கும் எனவும், இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப அளவு கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.