தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்! சென்னை வானிலை மையம் அதிரடி எச்சரிக்கை!

 
summer

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோவை சின்னக்கல்லாரில் 1.9 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 

ஓரிருஇடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.12 முதல் 16ம் தேதி வரை தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

12 முதல் 14ம் தேதி வரை வரை அதிகப வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படும்.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 - 39 டிகிரி லெ்சியசை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 - 29 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும். வெப்பம் சார்ந்த அசவுகரியம் ஏற்படக்கூடும். 

இவ்வாறு அந்த அறிக்கையில் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.