தமிழகத்தில் 3 இடங்களில் சதமடித்த வெயில்..!

 
1

இந்தியாவிலேயே அதிகபட்சமாக ஆந்திராவின் கர்னூலில் 102.92 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதே போல் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், கோடை காலத்தின் தொடக்கத்திலேயே வெயில் வாட்டி எடுத்து வருகிறது.  இதன்படி கரூர் பரமத்தியில் 100.4 டிகிரி, ஈரோட்டில் 100.76 டிகிரி அளவிற்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது.  

இதனை தொடர்ந்து மதுரை விமான நிலையம் பகுதியில் 99.86 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் மார்ச்  10ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.