நெஞ்சை பதற வைக்கும் சோகம்!உயிரை குடித்த கனமழை.. இரவில் வீடு இடிந்த துயரம்!
Oct 23, 2026, 09:42 IST1792728720593
விருதுநகர் அருகே மேட்டமலை கிராமத்தில் நேற்றிரவு முழுவதும் பெய்த கனமழையால், வீடு இடிந்து விழுந்தது. இதில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி முத்துச்செல்வி,17, பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மாணவியின் தாயார் சோலையம்மாள், சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

