நெஞ்சை பிளக்கும் கொடூரம்:காரின் பானெட்டில் மனைவி அலறியபோதும் நிறுத்தாத கணவன்!
காசிப்பூர் பகுதியைச் சேர்ந்த சுனிதா (32) என்ற பெண், தனது கணவர் மயங்க் (36) என்பவர் மகி வர்மா (34) என்ற பெண்ணுடன் காரில் பயணிப்பதைக் கண்டுள்ளார். ஹாப்பூர் சாலையில் உள்ள எல்-பிளாக் காவல் சாவடி அருகே காரை வழிமறித்து சுனிதா தடுத்து நிறுத்தியுள்ளார்.
அப்போது கணவன்-மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மயங்க் மற்றும் அவருடன் இருந்த பெண், சுனிதாவைத் தாக்கி, தூக்கி வீசி, கழுத்தை நெரிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. மேலும், சுனிதா காரின் முன் பக்க பானெட்டில் தொங்கிய நிலையிலும் காரை நிறுத்தாமல் இயக்க முயன்றுள்ளனர்.
இதுகுறித்துத் தகவலறிந்து வந்த லோஹியாநகர் காவல்துறையினர், மயங்க் மற்றும் மகி வர்மா ஆகிய இருவரையும் கைது செய்து, சம்பவத்தில் ஈடுபட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கோட்வாலி வட்டார அதிகாரி சங்கிராம் சிங் கூறுகையில், "பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் கொலை முயற்சி (பிரிவு 109(1)) மற்றும் அமைதிக்குக் பங்கம் விளைவிக்கும் வகையில் தகாத வார்த்தைகளால் பேசுதல் (பிரிவு 352) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
லக்னோவிலும் இதேபோன்ற சம்பவம்:
கடந்த மாதம் உத்தரப் பிரதேசத்தின் தலைநகர் லக்னோவிலும் இதேபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றது. அங்கு நண்பருடன் ஏற்பட்ட தகராறில், பெண் ஒருவர் மெதுவாகச் சென்ற காரின் பானெட்டில் ஏறி நின்றார். கார் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் வேகமாக இயக்கியதால், அந்தப் பெண் சாலையில் விழுந்தார். இந்தச் சம்பவத்திலும் தொடர்புடைய நபர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
🚨SHOCKING | Man drives his wife on bonnet of his car after she caught him with another woman in Meerut pic.twitter.com/JFPU9Pn5KZ
— The Tatva (@thetatvaindia) October 4, 2026
null

