தமிழகத்தில் ஜூன் 12ம் தேதி தடுக்கி விழும் இடத்திலெல்லாம் தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 
masu

தமிழகத்தின் ஜூன் 12ம் தேதி தடுக்கி வழும் இடத்திலெல்லாம் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படும் எனவும், இதனை பயன்படுத்தி மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  .

சென்னை அண்ணா நகரில் கப்பல் மூலமாக இலங்கை நாட்டு மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ள ரூபாய் 28 கோடி மதிப்புள்ள 137 வகையான மருந்துகளை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் கடந்த 29ம் தேதி, இலங்கையில் நிலவும் பொருளாதார தட்டுப்பாடு காரணமாக தமிழக அரசின் சார்பில் பொருள் உதவி வழங்கப்படும் என அறிவித்தார். அதனை தொடர்ந்து அரிசி, பால் பவுடர் மற்றும் 28 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்களை வழங்குவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் இதற்கான பணிகளை செய்தது. இந்த நிலையில் 137 வகையான அத்தியாவசிய மருந்துகள், சிறப்பு மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை பொருட்களை வழங்க சுகாதாரத்துறை தரப்பிலிருந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Ma Subramanian

முதல் தவணையாக 53 அத்தியாவசிய மருந்துகள் மற்றும் இரண்டு சிறப்பு மருந்துகள் ரூபாய் 8.87 கோடி ரூபாய் மதிப்பில் வழங்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 36 வகையான அத்தியாவசிய மருந்துகள், 39 சிறப்பு மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்ட இரண்டு தவணையாக வழங்கப்படும். மேலும் தற்போதைய 55 மருந்துகளில், 7 மருந்து வகைகள் குளிர்சாதன வசதி கொண்டு செல்லத் தக்கதாகவும், 48 மருந்துகள் சாதாரண வசதிகள் கொண்டு செல்லத் தக்கதாகவும் இருக்கிறது. இந்த மருந்துகள் அனைத்தும் விரைவில் கப்பல் மூலமாக இலங்கைக்கு தமிழக முதலமைச்சர் அனுப்பி வைப்பார். மேலும் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பொறுத்தவரை 93.5 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு உள்ளனர். இரண்டாம் தவணை 81.85 சதவீதம் பேர் போட்டு உள்ளனர். கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நல்ல முறையாக நடைபெற்று வருகிறது. தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாமல் உள்ளவர்களுக்கு தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் மாதம் ஒரு முறை தடுப்பூசி முகாம் இனிமேல் நடைபெறும், எனவே வருகின்ற ஜூன் 12ஆம் தேதி ஒரு லட்சம் இடங்களில் தமிழக அரசின் சேவை துறைகளையும் ஒருங்கிணைத்து தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்றார்.