மடியில் அமர வைத்து 5- ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய தலைமை ஆசிரியர்

செங்கம் அருகே அரசு பள்ளி மாணவிகளிடம் சிலிமிஷம் செய்த தலைமை ஆசிரியர் மீது மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுத்த நிலையில், தலைமை ஆசிரியர் தலைமறைவானார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள கிராமத்தில் இயங்கிவரும் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் சுந்தர விநாயகம். மதுபோதையில் பள்ளிக்கு வருவது மற்றும் ஐந்தாம் வகுப்பு பள்ளி மாணவிகளை அழைத்து அவர் மீது அமர வைத்துக்கொண்டு செல்போன்களில் தவறான படங்கள் காட்டியும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அதில் ஒரு சில மாணவிகள் தினசரி தலைமை ஆசிரியை இது போல் செயலில் ஈடுபட்டு வருவதாக பெற்றவர்களிடம் கூறியுள்ளனர்.
இந்த மாணவியின் பெற்றோர்கள் செங்கம் வட்டார கல்வி அலுவலர் சகிலாவிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் பெயரில் வட்டார கல்வி அலுவலர் பள்ளிக்குச் சென்று மாணவர்களிடம் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் தலைமை ஆசிரியர் சில்மிஷம் செய்தது உண்மை என தெரிய வந்துள்ளது.பின்னர் அந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் கார்த்திகேயனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்களுக்கு புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு பின்னர் திருவண்ணாமலை மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி கார்த்திகேயன் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க தற்காலிக பணி நீக்கம் செய்தனர். பின்னர் செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தலைமை ஆசிரியர் சுந்தர விநாயகம் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமை ஆசிரியரை தேடி வருகின்றனர்.