செயின் பறிப்பில் ஈடுபட்ட தலைமை காவலர் பணியிடை நீக்கம்!

 
tn

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட தலைமை காவலரை போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 27ம் தேதி மர்ம நபர் ஒருவர் அடுத்தடுத்து 2 பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். விசாரணையில் செட்டிபாளையம் தலைமைக் காவலர் சபரிகிரி என்பவர் இந்த செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து சபரிகிரையை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவர் செட்டிபாளையம் பகுதியிலும் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சபரிகிரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், பொள்ளாச்சி மற்றும் செட்டிப்பாளையத்தில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட தலைமை சபரிகிரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு சிறையில் உள்ள சபரிகிரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டுள்ளார்.