சாத்தான்குளம் வழக்கில் தலைமைக்காவலரின் ஜாமீன் மனு தள்ளுபடி

 
j

சாத்தான்குளம் வழக்கில் தலைமை காவலர் முருகன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

 தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான் குளத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் போலீசார் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விடிய விடிய கொடூரமாக தாக்கியதில் தந்தை மகன் இருவரும் அடுத்தடுத்து மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இந்த சம்பவம் ஐநா வரைக்கும் எதிரொலித்தது.

ச

 இதை அடுத்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில்,  இது குறித்த வழக்கு மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது .

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் தலைமை காவலர் முருகன் ஜாமீன் கோரி, மனுத்தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி முருகனுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து அவரின் ஜாமீன்  மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.