"நான் தான் கடவுள்" என கோயில் கருவறைக்குள் சென்று கலசத்தில் இருந்த பாலை மேலே ஊற்றிக் கொண்டு ரகளை
சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள சிவகாமி அம்மன் சன்னதியில் அலப்பறையில் ஈடுபட்ட நபர், கலசத்தில் இருந்த தண்ணீரை மேலே ஊற்றிக் கொண்டு கத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இந்த விழாவில் கோயில் தீட்சிதர்கள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று இரவு கோயிலின் உள்ளே வடக்கு பகுதியில் உள்ள சிவகாமி அம்மன் தனி சன்னதியில் பக்தர்கள் சிலர் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு நபர் திடீரென சிவகாமி அம்மன் சிலை அருகே சென்றுள்ளார். பின்னர் அவர் அங்கு கலசத்தில் இருந்த நீரை எடுத்து தனது தலையில் ஊற்றிக்கொண்டு அலப்பறையில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் கோயிலில் அங்கும் இங்கும் ஓடியபடி அலப்பறை செய்தபோது கோயில் காவலாளி ஒருவரும், தீட்சிதர் ஒருவரும் அவரை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த மர்ம நபர் அவர்களை தாக்கினார். இதை கோயிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த சிலர் செல்போனில் படம் பிடித்துள்ளனர். பின்னர் அங்கிருந்தவர்கள் ஒன்றிணைந்து அந்த நபரை பிடித்து, கோயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
"நான் தான் கடவுள்.." என கோயில் கருவறைக்குள் சென்று கலசத்தில் இருந்த பாலை மேலே ஊற்றிக் கொண்டு ரகளையில் ஈடுபட்ட நபர்.. #temple #chidambaram #aaruth
— Thanthi TV (@ThanthiTV) January 4, 2026
உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடைபெற்ற நிலையில் கோவில் வளாகத்தில் உள்ள… pic.twitter.com/X76EyCdFVy
"நான் தான் கடவுள்.." என கோயில் கருவறைக்குள் சென்று கலசத்தில் இருந்த பாலை மேலே ஊற்றிக் கொண்டு ரகளையில் ஈடுபட்ட நபர்.. #temple #chidambaram #aaruth
— Thanthi TV (@ThanthiTV) January 4, 2026
உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடைபெற்ற நிலையில் கோவில் வளாகத்தில் உள்ள… pic.twitter.com/X76EyCdFVy
பின்னர் போலீசார் அவரை சிதம்பரம் நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதற்கிடையே கோயில் தீட்சிதர்கள் நகர காவல் நிலையத்திற்கு சென்று அலப்பறையில் ஈடுபட்ட நபர் குறித்து புகார் அளித்தனர். பின்னர் போலீசார் பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வளரகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (35) என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் சம்பவம் குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது அவரது உறவினர்கள், மணிகண்டன் சற்று மனநலம் பாதித்தவர் என்பதும், அதற்காக அவர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


