`ஆடு ஜீவிதம்' நிஜ ஹீரோ இவர் தான் : மனதை உலுக்கும் சோகம்..!

 
1

கேரளாவில் உள்ள நஜீப் என்பவர் அரபு நாட்டிற்கு வேலைக்கு சென்ற போது அவர் அங்கு ஒட்டகங்கள் மேய்க்கும் அடிமையாக கொடுமைப்படுத்தப்பட்டார் என்பதும் அவர் அங்கிருந்து தப்பித்து கேரளா வந்த நிலையில் தான் ஒரு எழுத்தாளர் அவரைப் பற்றி கேள்விப்பட்டு அவருடைய முழு கதையையும் கேட்டு ‘ஆடு ஜீவிதம்’ என்ற கதையை எழுதினார். 
 
கேரளாவில் மிக அதிகமாக விற்பனையான புத்தகம் ‘ஆடு ஜீவிதம்’ என்பதும் இதே பெயரில் தான் இயக்குனர் பிளஸ்ஸி என்பவர் இந்த நாவலை படமாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் புத்தகம் எழுதப்பட்ட நிலையில், அதே ஆண்டில் இந்தப் புத்தகத்தைப் படித்த இயக்குநர் ப்ளெஸ்ஸி, ஹீரோ பிருத்விராஜ் சுகுமாரனை இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க முடிவு செய்தார்.படத்தின் பட்ஜெட் காரணமாக 2015 வரை தயாரிப்பாளர் இந்த படத்திற்கு கிடைக்கவில்லை. படத்தின் ஹீரோ பிருத்விராஜ் சுகுமாரன் பட்ஜெட் காரணமாக தனது சம்பளம் ஏதும் வாங்காமல் இந்த படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆடுஜீவிதம் படத்தின் முதன்மை ஃபோட்டோ ஷூட் 2018 இல் தொடங்கியது, கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக படப்பிடிப்பு 2020 இல் நிறுத்தப்பட்டது. படப்பிடிப்பிற்காக ஜோர்டான் சென்ற படக்குழுவினர் கோவிட் காரணமாக அங்கு சிக்கினர். கோவிட்-19 தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக பட குழுவினர் பிருத்விராஜ் உட்பட ஜோர்டானிய பாலைவனத்தில் 2020 மார்ச் முதல் மே வரை 70 நாட்கள் தவித்தனர்.

இறுதியாக, வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக மத்திய அரசு மேற்கொண்ட வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் மூலம் இந்தப் படத்தின் குழுவினர் வீடு வந்து சேர்ந்தனர். ஜூலை 14, 2022 அன்று, படத்தின் படப்பிடிப்பு இறுதியாக நிறைவடைந்தது. இருப்பினும், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் தாமதமானது. இறுதியாக மார்ச் 28 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் நடித்துள்ள பிரித்விராஜ், அமலா பால் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பு பாராட்டுகளை பெற்று வருகிறது.

நஜீப் கூறுகையில், ‘சவுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சேல்ஸ்மேன் வேலை காலியாக உள்ளது’ என்று ஏஜென்ட் ஒருவர் சொன்ன பொய்யை நம்பியது வாழ்வில் அவர் செய்த மிகப்பெரிய பிழை.விசா பெறுவதற்கு பணம் தேவை. என்ன செய்வதென்று தெரியாதவர். தனக்கென இருந்த 5 சென்ட் நிலத்தை விற்று அதன் மூலம் கிடைத்த ரூ.55 ஆயிரம் பணத்தை கொடுத்திருக்கிறார். கேரளாவிலிருந்து மும்பை சென்று அங்கிருந்து விமானம் மூலமாக சவுதி அரேபியாவை அடைந்த அவர், ரியாத்துக்கு முகவர் ஒருவரால் அழைத்துச் செல்லப்படுகிறார்.ரியாத்தில் இறங்கியதும் அரபுநாட்டைச் சேர்ந்த ஒருவர் என்னை வண்டியில் அழைத்துக் கொண்டு சென்றார். தூரத்தில் நூற்றுக்கணக்கான ஆடுகள் நிற்பதைப் பார்த்தேன்.அங்குபோனதுமே சாப்பிடுவதற்கு என்ன செய்வேன் என்று நினைத்து அப்போதே நான் அழத் தொடங்கிவிட்டேன். என்னைக் கொண்டு விட்டவர் புறப்பட்டுச் சென்றுவிட்டார். எனக்கு ஆடு மேய்க்கும் வேலை என்பதைப் புரிந்துகொண்டேன். 

தண்ணீர் இல்லாததால் குளிக்க முடியாது. ஒரேயொரு துணி மட்டுமே உடுத்தியிருந்தேன்.தலைமுடியும், தாடியும் நீண்டு சுத்தமில்லாமல் தவித்தேன். தொடக்கத்தில் நாற்றம் குமட்டியது. பின்பு பழகிவிட்டது. என் வாழ்க்கை இப்படியே முடிந்துவிடும் என நினைத்தேன். அரபு நாட்டைச் சேர்ந்தவர் என்னிடம் ஆடுகளில் பால் கறக்கச் சொன்னார். நான் கறந்து பார்த்தேன், பால் வரவில்லை. இதனால் அவருக்குக் கோபம் ஏற்பட்டு என்னைத் தாக்கினார்.பின்னர் எப்படிப் பால் கறப்பது என்று அவர் சொல்லித்தந்தார். 

நான் ரியாத்திற்குச் சென்ற போது என் மனைவி எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார். மனைவியின் நிலைமை என்ன ஆனதோ என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். என்ன தேதி, என்ன மாதம் எதுவுமே எனக்குத் தெரியவில்லை. சூரியன் உதிப்பதும் மறைவதும் மட்டும்தான் என்னால் பார்க்க முடியும்.ஒருகட்டத்தில் அங்கிருந்து தப்பி ஓடினேன். ஒன்றரை நாள்கள் ஓடி ஓர் இடத்தை அடைந்தேன். அங்கு கேரளாவைச் சேர்ந்த ஒருவர் ஹோட்டலில் எனக்கு உணவு தந்தார். பாஸ்போர்ட், விசா எல்லாம் ஆட்டு உரிமையாளரிடம் இருந்ததால் என்னை போலீஸார் கைது செய்து இந்தியாவுக்கு அனுப்பினார்கள். மும்பை விமானநிலையத்தில் வந்து இறங்கிய எனக்கு சொந்த ஊர் செல்லப் பணம் இல்லை. அங்கு ஒருவர் டிக்கெட் எடுக்க உதவி செய்ததால் ரயிலில் சொந்த ஊர் திரும்பினேன். இரண்டு வருடத்தில் சுமார் 30 கிலோ குறைந்துவிட்டேன்.

'ஆடு ஜீவிதம்' நாவல் வெளியானதும் மக்களுக்கு அறிமுகமானவன் ஆனேன். 'என்றார்