இவர் தான் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் 007: வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

 
1

உலகப் புகழ்பெற்ற 'ஜேம்ஸ் பாண்ட்' (007) திரைப்பட வரிசையில், டேனியல் கிரெய்கிற்குப் பிறகு அடுத்த ஜேம்ஸ் பாண்டாக பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பாட்டின்சன் (Robert Pattinson) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், அதிகாரப்பூர்வ ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் இக்கதாபாத்திரத்தில் நடிக்கும் 7-வது நடிகர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

பிரபல நடிகர் டேனியல் கிரேக் தொடர்ந்து 5 ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்தார். கடைசியாக 2021ம் ஆண்டு ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில் 25வதுபடமான ' நோ டைம் டுடை' வெளியானது. இனி ஜேம்ஸ்பாண்ட் வேடங்களில் நடிக்கப் போவதில்லை என டேனியல் கிரேக் அறிவித்தார். அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார் என்ற கேள்வி உலகளவில் உள்ள ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அதற்கான தேடுதல் முயற்சிகள் நடந்தன.

இந்நிலையில் ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் பிரபல நடிகர் ராபர்ட் பேட்டின்சன் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.பேட்மேன் படத்திலும் மற்றும் கிறிஸ்டோபர் நோலனின் இயக்கத்தில் வெளியான தி ஒடிசி படத்திலும் நடித்துள்ளார். 2028 ல் வெளியாக உள்ள தி பேட்மேன் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.புதிய ஜேம்ஸ்பாண்ட் ஆக ராபர்ட் பேட்டின்சனின் புகைப்படமும் வெளியாகிஉள்ளது. அடுத்த ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தை டெனிஸ் வில்லெனுவ் இயக்க உள்ளார்.

திங்கள்கிழமை (நவம்பர் 16) அன்று ஜேம்ஸ் பாண்டின் அதிகாரப்பூர்வ X (ட்விட்டர்) மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருந்த பழைய பதிவுகள் அனைத்தும் திடீரென நீக்கப்பட்டு, "அடையாளம் உறுதி செய்யப்பட்டது" (Identity confirmed) என்ற வாசகம் பதிவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜேம்ஸ் பாண்டின் பாரம்பரிய உடையில் (Tuxedo) ராபர்ட் பாட்டின்சன் இருக்கும் முதல் புகைப்படத்தை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம், சினிமாவின் மிகவும் கொண்டாடப்படும் கதாபாத்திரத்திற்கு இது ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைக்கும் எனத் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள 40 வயதான ராபர்ட் பாட்டின்சன், "சினிமா வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற கதாபாத்திரமான 007 பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய கௌரவம்; எனது கனவு நனவாகியுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார். ஜோஷ் ஓ'கானர், காலம் டர்னர் உள்ளிட்ட 5 முன்னணி நடிகர்கள் அடங்கிய இறுதிப் பட்டியலிலிருந்து ராபர்ட் பாட்டின்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2021-ஆம் ஆண்டு வெளியான 'நோ டைம் டு டை' (No Time to Die) படத்துடன் 5 படங்களில் நடித்த டேனியல் கிரெய்க் விடைபெற்ற நிலையில், தற்போது உருவாகவுள்ள 26-வது ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தில் ராபர்ட் பாட்டின்சன் நடிக்கவுள்ளார். 2025-ஆம் ஆண்டில் அமேசான்-எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் (Amazon-MGM Studios) 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகைக்கு ஜேம்ஸ் பாண்ட் உரிமையைக் கைப்பற்றிய பிறகு உருவாகும் முதல் திரைப்படம் இதுவாகும்.

இப்படத்தை 'டூன்' (Dune) படங்களின் இயக்குநர் டெனிஸ் வில்லெனுவ் இயக்க, 'பீக்கி பிளைண்டர்ஸ்' புகழ் ஸ்டீவன் நைட் திரைக்கதை எழுதுகிறார். டேவிட் ஹேமன் மற்றும் ஏமி பாஸ்கல் ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். 'ஹாரி பாட்டர்', 'ட்விலைட்' (Twilight) மற்றும் 'தி பேட்மேன்' (The Batman) ஆகிய படங்கள் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட ராபர்ட் பாட்டின்சன், சீன் கானரி, ரோஜர் மூர், பியர்ஸ் பிராஸ்னன், டேனியல் கிரெய்க் ஆகியோரின் வரிசையில் தற்போது புதிய 007 ஆக இணைந்துள்ளார்.