தேர்தலில் போட்டியிட மோடியிடம் பணம் கேட்டிருக்கலாம்...இல்லையென்றால்...
மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் உள்ளார். இவருக்கு தமிழ்நாடு அல்லது ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததாகவும், தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா? என்று கேள்வி எழுந்தது. இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் “என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம், என்னுடைய சேமிப்பு எல்லாம் என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் கிடையாது” என்றார்.
இந்நிலையில், இது தொடர்பாக, பாஜக மூத்த நிர்வாகி சுப்பிரமணிய சாமி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தலில் போட்டியிட மோடியிடம் பணம் கேட்டிருக்கலாம். மேலும் அவர் 2004-05 மற்றும் 2022-23க்கான வருமான வரி அறிக்கையை வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் தேர்தலில் போட்டியிடாததற்கான உண்மையான காரணத்தை நிர்மலா சீதாராமன் கூறியிருக்க வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
She should have asked Modi to "give the kind of money" to contest, having served him in a variety of positions. Also she should have published her Income Tax Returns for 2004-05 and 2022-23. Otherwise she should tell us the real reason. https://t.co/1kmHU98iMM
— Subramanian Swamy (@Swamy39) March 30, 2024