#HBDரஜினிகாந்த்: மறக்க முடியாத ரஜினியின் பஞ்ச் டயலாக்குகள்!
'படையப்பா' திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் கூறியது போல, "வயதானாலும் இவரின் ஸ்டைலும் அழகும்" இவரை விட்டுப் போகவில்லை. இந்தாண்டு டிசம்பர் 12-ம் தேதியோடு அவரது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு அவரின் மிகச்சிறந்த 10 பஞ்ச் டயலாக்குகளைப் பார்ப்போம்.
ஒரு படத்திலேயே பல பஞ்ச் டயலாக்குகளைப் பேசுபவரிடம், 'டாப் 10' என அலசுவது கொஞ்சம் சிரமம் தான். முடிந்தளவு ஆராய்ந்து உங்களுக்கு விருந்துப் படைக்கிறோம். உங்களுக்கு தோன்றுவதை கீழே உள்ள பாக்ஸில் கமெண்டிடுங்கள்!

படம் - பாட்ஷா
டயலாக் - நா ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி

படம் - முள்ளும் மலரும்
டயலாக் - கெட்ட பய சார் இந்த காளி

படம் - பாட்ஷா
டயலாக் - நல்லவங்கள ஆண்டவன் நெறைய சோதிப்பான், ஆனா கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு நெறைய கொடுப்பான் ஆனா கை விட்டுடுவான்.

படம் - 16 வயதினிலே
டயலாக் - இது எப்டி இருக்கு?

படம் - அண்ணாமலை
டயலாக் - நான் சொல்றதையும் செய்வேன், சொல்லாததையும் செய்வேன்.

படம் - கபாலி
டயலாக் - நா வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு...

படம் - முத்து
டயலாக் - நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன்.

படம் - படையப்பா
டயலாக் - கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. கஷ்டப்படாம கிடைச்சது என்னிக்குமே நிலைக்காது.

படம் - சிவாஜி
டயலாக் - கண்ணா! சிங்கம் சிங்கிளா தான் வரும். பன்னிங்க தான் கூட்டமா வரும்.

படம் - காலா
டயலாக் - க்யாரே செட்டிங்கா? வேங்கை மவன் ஒத்தைல நிக்கேன். மொத்தமா வாங்கலே.
படம் - பேட்ட
நான் வீழ்வேன் என நினைத்தாயோ..!!
பாக்கத்தான போற
இந்த காளியோட ஆட்டத்தை
சிறப்பான தரமான சம்பவங்களை
இனிமேல்தான் பாக்கப்போற
எவனுக்காவது பொண்டாட்டி
குழந்தை குட்டி-னு
Sentiment கிண்டிமெண்ட் இருந்தா
அப்படியே ஓடிப்போயிரு
கொலை காண்டுல இருக்கேன்
மவனே கொல்லமா விடமாட்டேன்

படம் - தர்பார்
என்னா பாக்குற
Original-ஆவே நான் வில்லன் மா
இதெப்புடி இருக்கு
Sir அவன்கிட்ட சொல்லிவைங்க
Police-அ Left-ல வச்சுக்கோ
Right-ல வச்சுக்கோ ஆனா
Straight-ஆ வச்சுக்காதன்னு

படம் - அண்ணாத்தே
கிராமத்தான குணமாதான
பார்த்திருக்க கோவப்பட்டு
பார்த்தது இல்லையே
காட்டாறு காட்டாறு
கரையும் கிடையாது
தடையும் கிடையாது
என் தங்கச்சிய கண்கலங்க
வச்சவன கதிகலங்க வைக்கிறேன்
நியாயமும் தைரியமும்
ஒரு பொம்பளை புள்ளைக்கு
இருந்துச்சுன்னா அந்த சாமி
இறங்கி வந்து துணையா நிக்கும்
ஜெயிலர் பஞ்ச் டயலாக்
"ஹேய் இங்க நான் தான் கிங்... நான் வச்சது தான் ரூல்ஸ்... அந்த ரூல்ஸ்ஸ அப்பப்போ என் இஷ்டத்துக்கு மாத்திட்டே இருப்பேன்... அத கப்சிப்ன்னு ஃபாலோ பண்ணனும்... அத விட்டுட்டு எதாவது அடவாடித்தனம் பண்ண நினைச்ச... உன்ன கண்டம் துண்டமா வெட்டி கலைச்சு போட்டுடுவேன்... ஹ்ம்க்கும் டைகர் கா ஹ்ம்க்கும்"
இப்படி அவரின் ஒவ்வொரு பஞ்ச் டயலாக்கையும் சொல்லிக் கொண்டேப் போகலாம். உங்களுக்குப் பிடித்ததை கமெண்ட்டில் தெரியப்படுத்துங்கள்!


