கேஸ் சிலிண்டர் புக் செய்தும் வரவில்லையா? உடனே இதை செய்யுங்க..!
கேஸ் சிலிண்டர் முன்பதிவு விதிகளையும் மாற்றியது. முன்பு 15 நாட்கள் இருந்த இடைவெளி தற்போது 21 நாட்களை உயர்த்தப்பட்டது.
21 நாட்களுக்கு பிறகு மற்றொரு சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியும். அதே நேரத்தில், ஊரக பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவுக்கான இடைவெளியில் 25 நாட்களில் இருந்து 45 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் வசிக்கும் நுகர்வோர் இப்போது ஒரு சிலிண்டரை வாங்கிய குறைந்தது 45 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியும்.
இருப்பினும், எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்த பிறகு, எரிவாயு நிறுவனங்கள் நுகர்வோருக்கு சிலிண்டர்களை வழங்குவதில் தாமதம் செய்வதாக மக்கள் புகார் அளித்து வருகின்றனர். இதனால், மக்கள் சிலிண்டர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
எனவே, சிலிண்டர் முன்பதிவு செய்தும் உங்களுக்கு சிலிண்டர் விநோயகம் செய்யப்படவில்லை என்றால் உடனே புகார் தெரிவிக்கலாம். அந்தந்த கேஸ் நிறுவனங்களின் எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
Indane Gas ஏஜென்சி
இன்டன் கேஸ் ஏஜென்சி தொடர்பான எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு மற்றும் புகார்களுக்கு நீங்கள் 7718955555 என்ற எண்ண தொடர்பு கொள்ளலாம். மேலும், கட்டணமில்லா எண் 1800 233 3555 என்ற கட்டணமில்லா எண்ணையும் மக்கள் தொடர்பு கொண்டு கேஸ் சிலிண்டர் விநியோகம் தாமதமானால் புகார் தெரிவிக்கலாம்.
HP Gas ஏஜென்சி
ஹெச்பி கேஸ் தொடர்பான எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு மற்றும் டெலிவரி தொடர்பான புகார்களுக்கு நீங்கள் 9493602222 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும், 1800 233 3555 என்ற கட்டணமில்லா எண்ணையும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
Bharat Gas ஏஜென்சி
பாரத் கேஸ் நுகர்வோர் 7715012345 என்ற எண்ணை தொடர்பு கொண்டு, நீங்கள் முன்பதிவு செய்த கேஸ் சிலிண்டர் வரவில்லை என்றால் புகார் தெரிவிக்கலாம். அதேபோல, 1800224344 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

