கேஸ் சிலிண்டர் வாங்கும் முன் இதை கவனித்தீர்களா? - கேஸ் சிலிண்டருக்கும் காலாவதி தேதி இருக்காம்...!!
சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி கண்டுபிடிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு சிலண்டரிலும் அதன் காலாவதி தேதி எழுதப்பட்டிருக்கும். அவை ஆங்கில எழுத்துக்கள் மற்றும் எண்களில் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதன் மூலம் சிலிண்டரின் காலாவதி தேதியை கண்டுபிடிக்கலாம்.சிலிண்டரில் A26, B25, C30, D32 என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். A ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகியவற்றைக் குறிக்கிறது. B ஏப்ரல், மே, ஜூன் ஆகியவற்றைக் குறிக்கிறது. C ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகியவற்றைக் குறிக்கிறது. D அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகியவற்றைக் குறிக்கிறது.
எடுத்துக்காட்டாக ஒரு சிலிண்டரில் A26 என்று குறிப்பிட்டு இருந்தால், அந்த சிலிண்டர் மார்ச் 2026க்குள் காலாவதியாகிவிடும். சிலிண்டரில் D32 என்று குறிப்பிட்டு இருந்தால், அதனை டிசம்பர் 2032 வரை பயன்படுத்தி கொள்ளலாம்.
சிலிண்டரின் காலாவதி தேதியை தெரிந்து கொள்ளலாம். ஆனால் ஒரு சிலிண்டர் எத்தனை வருடங்களுக்கு பிறகு காலாவதியாகும். ஒரு சிலிண்டர் 15 ஆண்டுகளில் காலாவதியாகிறது. இதற்கிடையில், ஒரு சிலிண்டர் 10 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு அதன் தரம் சோதிக்கப்படுகிறது. காலாவதியான சிலிண்டரை பயன்படுத்துவது சில ஆபத்துக்களை ஏற்படுத்தலாம். சில நேரங்களில் வேறு காரணங்களாலும் கசிவு ஏற்படலாம். எனவே நீங்கள் ஒரு சிலிண்டரை வாங்கும் போதெல்லாம், அதை எடைபோடுவதோடு, அது எங்கிருந்தும் கசிகிறதா இல்லையா என்பதை சரியாகச் சரிபார்க்கவும் மற்றும் அதன் காலாவதி தேதியையும் சரிபார்க்கவும்.

