10 ஆண்டுகளாக தமிழ்நாட்டை சுரண்டினார்களே? -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்

 
stalin

தருமபுரியில் ரூ.560 கோடி மதிப்பில் 75 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் 8,736 பயனாளிகளுக்கு அரசு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.  தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் முடிவுற்ற 993 திட்டங்களை தொடங்கி வைத்தார்.

stalin

தருமபுரியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசிய போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றிக் காட்டியுள்ளோம்; உரிமைத் தொகை ஸ்டாலின் அண்ணன் கொடுத்த சீர் என பேட்டியில் ஒரு சகோதரி கூறினார்;  திராவிட மாடல் அரசுக்கும், தமிழ்நாட்டிற்கும், இத்திட்டத்தால் ஏற்பட்டுள்ள குடும்ப பாசத்தை எண்ணி மனம் நெகிழ்ந்து போனேன். விடியல் திட்டம் மூலம் மகளிர் மாதம்தோறும் 888 ரூபாய் சேமிக்கின்றனர் மக்களின் மனசாட்சியாக இந்த அரசு இருக்கிறது.

stalin

தருமபுரி மக்களுக்கு நல்ல குடிநீர் வழங்கியதில் நான் முக்கியப் பங்காற்றியுள்ளேன். நான் அமைச்சராக இருந்தபோது ரூ.1,928 கோடியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. ஆட்சி மாறியதும் ஒகேனக்கல் திட்டம் கிடப்பில் போட்டதை எதிர்த்து நானே போராட்டம் நடத்தினேன். மக்களின் குறைகளை தீர்க்க அடுத்தடுத்து திட்டங்களை நிறைவேற்றும் திராவிட மாடல் அரசு இது. 10 ஆண்டுகள் தமிழ்நாட்டை சுரண்டியவர்களால் சாதனைகளை பட்டியலிட முடியுமா? ஒகேனக்கல் போன்ற திட்டங்களை முடக்கியது தான் அதிமுகவின் ஒரே சாதனை. என்றார்.