மீண்டும் இணைந்த தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடி?

 
மீண்டும் இணைந்த தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடி?

முக்கிய திரை பிரபலங்களான தனுஷ் - ஐஸ்வர்யா ஆகிய இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் தனுஷ் மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் குடும்பத்துடன் நட்புறவுடன் இருக்கிறார்.  விவாகரத்து பெற்ற போதிலும், தனுஷும்  ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் ஒரு சுமுகமான உறவைப் பேணி வருகின்றனர், குறிப்பாக அவர்கள் தங்கள் மகன்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இருவரும் ஒன்றிணந்துள்ளதாகவும்,
இருவரும் தங்கள் மகன்கள் மீதான பொறுப்புகளைத் தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 

தனுஷும் ஐஸ்வர்யாவும் மீண்டும் நெருக்கமாகியிருக்கலாம் என்றும், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருடன் தனுஷ்க்கு ஏற்பட்டிருந்த மனக்கசப்பு முடிவுக்கு வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.  அதுமட்டுமின்றி, ஒரு புதிய படத்திற்காக தனுஷ் - அனிருத் மீண்டும் இணையக்கூடும் என்ற பேச்சும் அடிபடுகிறது. அதே நேரத்தில் தனுஷும் ஐஸ்வர்யாவும் அனிருத்தின் வரவிருக்கும் திருமண விழாக்களில் ஒன்றாகக் கலந்துகொள்ளக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.