ஜெம் வீரமணியிடம் கம்யூனிஸ்ட் கட்சிகளும் நிதி பெற்றுள்ளதா?- சண்முகம் விளக்கம்

 
தற்போது திமுக கூட்டணி இல்லை- சண்முகம்

ஜெம் கிரானைட் வீரமணியிடம் சிபிஐ(எம்) எந்த சூழ்நிலையிலும் நிதி வாங்கவில்லை என்பதை மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் என சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தனது எக்ஸ் தளத்தில், “திரு.சாவித்திரி கண்ணன் அவர்கள் அறம் இணைய இதழில் ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி மீதான போக்சோ வழக்கு குறித்து எழுதியுள்ளார். அதில், அவரிடம் நிதி பெற்றவர்களில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் விதிவிலக்கு அல்ல என்று போகிற போக்கில் சேற்றை வாரி வீசி உள்ளார். ஜெம் கிரானைட் வீரமணியிடம் சிபிஐ(எம்) எந்த சூழ்நிலையிலும் நிதி வாங்கவில்லை என்பதை மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். நிதி பெற்றதாக குறிப்பிட்டுள்ள சாவித்திரி கண்ணன், பகிரங்கமாக அதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். அல்லது நாங்கள் நிதி பெற்றதை நிரூபிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகள் மீது அக்கறை இருப்பதைப் போல காட்டிக் கொள்ள எங்களை ஏன் சீண்ட வேண்டும். தாமதம் என்றாலும் முதலில் போராட்டத்தை நடத்துவது சிபிஐ(எம்) தான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.