“அதிகாரமிக்க நபர்கள் தொடர்பு கொண்டனரா? - சிபிஐ விசாரணை தேவை!

 
tn

யூடியூபர் சவுக்கு சங்கர் வழக்கில்  நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை தொடர்பு கொண்ட 2 அதிகாரமிக்க நபர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்  வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

tn 

பிரபல ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் பெண் காவலர்களை  இழிவுப்படுத்தி யூடியூப் சேனலுக்குப் பேட்டி கொடுத்ததாக கோவை போலீசார் கடந்த 5 ஆம் தேதி தேனியில் அவரை கைது செய்தனர். பின்னர், அவர் தனது வாகனத்தில் 500 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக  வழக்குப்பதியப்பட்டுள்ளது. கோவை, தேனி, திருச்சி, சேலம், சென்னை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 7 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.  கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை  சிறைக் காவலர்கள் தாக்கியதாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.சவுக்கு சங்கர் விவகாரத்தில் நீதிமன்றத்தில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து அவரது தாயார் வழக்கு தொடர்ந்தார்.

high court

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து  உத்தரவிட்டார். நீதிபதி பாலாஜி மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளார். அதேநேரம், கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை கோவையிலிருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சாமிநாதன், பாலாஜி ஆகியோர் உத்தரவு பிறப்பித்துள்ளனர். குண்டர் சட்டம் தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கவும் நீதிபதி பாலாஜி உத்தரவு பிறப்பித்தார். சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்ய கோரிய வழக்கில் 3வது நீதிபதியின் விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

tn

இந்நிலையில்  யூடியூபர் சவுக்கு சங்கர் வழக்கு விசாரணை தொடர்பாக நீதிபதி சுவாமிநாதனை இரு அதிகாரமிக்க நபர்கள் தொடர்பு கொண்டதாக அவர் கூறிய விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை | உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கடிதம் அந்த நபர்கள் யார் என்பதை நீதிபதி சுவாமிநாதன்வெளிப்படுத்தாததால், அவர்களை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கடிதம் எழுதியுள்ளார்.