கில்லி படத்தில் விமல் பாடியிருக்கிறாரா?

 
1 1

கில்லி படத்தில் இடம் பெற்ற அர்ஜுனரு வில்லு, ஷா லா லா, அப்படி போடு, சூர தேங்கா, கொக்கர கொக்கரக்கோ என்று பல பாடல்கள் இடம் பெற்றிருந்தன. இந்தப் பாடல்கள் அனைத்தும் ஹிட் பாடலாக அமைந்தது. இதற்கு முக்கிய காரணம் வித்யாசாகர் இசை தான். ஏ எம் ரத்னம் இந்த படத்தை தயாரித்திருந்தார்.

இந்தப் படம் ஏற்கனவே 50 கோடி வசூல் குவித்திருந்த நிலையில் மீண்டும் 2ஆவது முறையாக ரீ ரிலிஸ் செய்யப்பட்டது. அப்படி ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி படம் ரூ.26 கோடி முதல் ரூ.33 கோடி வரையில் வசூல் குவித்திருந்தது. இந்த நிலையில் தான் இந்தப் படத்தில் விமல் ஒரு பாடல் பாடியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அந்த வரிகள் என்னவென்றால் கொக்கர கொக்கரக்கோ என்ற பாடலில் இடம் பெற்ற தூம் ஷக் தூம் தூம் தூம் ஷக் தான் அந்த பாடல் வரிகள். இதனை விமல் பாடியிருப்பதோடு படத்தில் விஜய் உடன் இணைந்து அவரது குழுவில் ஒருவராக நடிக்கவும் செய்திருப்பார். இந்தப் பாடலுக்கு யுகபாரதி பாடல் வரிகள் எழுதிக் கொடுத்துள்ளார். மேலும் உதித் நாராயணன் மற்றும் சுஜாதா மோகன் இருவரும் இணைந்து அந்த பாடலை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.