TRB ராஜா எப்பவாச்சும் உழைச்சு சம்பாதிச்சிருக்காரா? விமர்சனத்திற்கு அண்ணாமலை பதில்..!

 
1

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.வாக்காளர்களை கவரும் விதமாக வேட்பாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை பாராளுமன்ற பாஜக வேட்பாளர் அண்ணாமலை கோவையில் பல்வேறு இடங்களில் தொடர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். அதே போல அண்ணாமலைக்கு ஆதரவாக பாஜக தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 

இந்த பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை கோவை தெற்கு தொகுதியில் ஹிந்தி மொழியில் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். .மூன்று அச்சுகளில் சுழலும் பிரசார களம்.செட்டி வீதி, பெரிய கடை வீதி, பூ மார்க்கெட் ஆகிய பகுதிகளில் திறந்த வாகனத்தில் நின்றவாறு அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். 

இதன் தொடர்ச்சியாக வட இந்திய மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய தெப்பக்குளம் மைதானத்தில் பிரசாரம் மேற்கொண்ட அண்ணாமலை,  ஹிந்தி மொழியில் பேசி வாக்கு சேகரித்தார். அப்போது வட இந்திய மக்களிடம் ஹிந்தியில் உரையாற்றிய அண்ணாமலை, அனைவருக்கும் வணக்கம்,எல்லோரும் தயவு கூர்ந்து நினைவு கொள்ளுங்கள் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நமது தாமரை மலர தங்களது அனைத்து குடும்பங்களுக்கும் தெரியப்படுத்துங்க,நல்லதொரு இந்தியாவை கொண்டு வருவதற்கு  நல்ல மனிதரான மோடியை மீண்டும் பிரதமராக கொண்டு வருவதற்கு கோவையில் உள்ள தங்களது குடும்பத்தினர் அனைவரும்  தாமரைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,  “திமுக, அதிமுக-வினர், ‘கோவையில் ஆட்டு பிரியாணி ரெடி ஆகிட்டிருக்கு’ என பரப்புரை செய்கிறார்களே... அதுபற்றிய உங்கள் கருத்து என்ன?” என கேட்டனர்.

அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “எவ்வளவு பயந்து போய் உள்ளார்கள் அவர்கள் என தெரிகிறது. அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, ஆட்டுக்குட்டியை தூக்கிக்கொண்டு போகிறாராம்... எவ்வளவு பயந்துவிட்டார்கள் பாருங்கள். கோவையில் உள்ள குரும்பா பிரிவு மக்கள், ஆடு மேய்க்கும் தொழிலை பிரதானமாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் ஆட்டின் தோலினால் செய்யப்பட்ட கம்பளியை ஆசையாக எனக்கு நேற்று போர்த்தினார்கள். இதுதான் ஜனநாயகம்.ஒரு ஜனநாயகத்தின் மரபே, ஒருவர் செய்யும் வேலையை ஏற்று, அதற்கு நாம் அப்படியே அங்கீகாரம் கொடுக்க வேண்டும். டி.ஆர்.பி ராஜாவுக்கு என்றாவது ஒருதுளி வேர்வை சிந்தியதுண்டா? கிராமத்திலோ நகரத்திலோ அவர் உழைத்து சம்பாதித்துள்ளாரா?  

என் பதில், ஆட்டை பிரியாணி போடுங்கள்... அல்லது என்னவேணும்னாலும் செய்யுங்கள். ஆனால் ஆட்டை கொடுமை செய்யாமல் இருங்கள். அதுதான் என் அன்பான வேண்டுகோள்.என்னதான் இவர்கள் தலைகீழாக நின்றாலும், கோவை மக்கள் புது சரித்திரத்தை எழுதுவர். கோவை மக்கள் தெளிவாக இருக்கும்போது, டி.ஆர்.பி. ராஜா போன்றோரால் எப்படி மக்கள் முடிவை மாற்ற முடியும்?” என்றார்.